வடக்கில் விகாரைகள் அமைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது!

ekuruvi-aiya8-X3

vikaraiதமிழரின் பூர்வீகமான வடக்குக் கிழக்குப் பகுதியில் இராணுவத்தினர் விகாரைகளை அமைத்து பௌத்த மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நவசமாசக் கட்சியின் பொருளாளர் வல்லிபுரம் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சி நடாத்துகின்றன. ஆனால் அவைகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டவண்ணமேயுள்ளன.

இரண்டு கட்சிகளும் 2020இல் தனித்து ஆட்சி அமைக்கும் நோக்கில் செயற்படுவதால், இந்த அரசாங்கத்தின் காலத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வு கிடைக்குமா? என்பதில் சந்தேகமே எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் இப்பவும் தமது கைங்கரியத்தினை மேற்கொள்கின்றனர் எனவும், அண்மையில் கிளிநொச்சியில் புத்தவிகாரையொன்று அமைக்கப்பட்டதாகவும் அதற்கு அநுராதபுரம் மகாபோதியிலிருந்து அரசமரக் கிளை கொண்டுவந்து நாட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கின் கரையோரப் பகுதிகள் அனைத்தும் சிங்கள இராணுவம் புத்த விகாரைகளை அமைத்து வருகின்றது. புத்த மதம் புனிதமான மதம் தான். ஆனால் வடக்கில் விகாரைகள் அமைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment