எட்டு வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி

Thermo-Care-Heating

vijaysethupathi222-X._விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆறுமுக குமார் என்பவர் இயக்கும் இப்படத்தில் நிகரிகா கொனிடேலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடியின தலைவராக நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பழங்குடியின தலைவரான விஜய் சேதுபதி நகரத்துக்கு வருவதுபோல படத்தின் கதையை மையப்படுத்தியிருக்கிறார்களாம்.

படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் காட்டுக்குள்ளேயே படமாக்கியுள்ளார்களாம். பழங்குடியின மக்கள் பின்பற்றும் தனித்துவ சடங்குகளை பற்றியே கதை நகர்வதால் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடிக்க வேண்டியிருந்ததாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி 20 வயது இளைஞனாக நடித்துள்ளாராம். இதற்காக தனது முகத்தில் தாடி, மீசை எல்லாவ்ற்றையும் சவரம் செய்து வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளாராம்.

விஜய் சேதுபதியின் கெட்டப்புக்காக 3 மேக்கப் மற்றும் சிகையலங்கார குழுவை நியமித்துள்ளார்களாம். படத்தின் பெரும்பகுதியான காட்சிகள் படமாக்கிவிட்டார்களாம். இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ideal-image

Share This Post

Post Comment