சட்டமா அதிபரின் கைக்கு சென்ற விஜயகலாவின் வாக்குமூலம்

Facebook Cover V02

vijayakala-8முன்னாள் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் அவர் ஆற்றியிருந்த சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் பொலிஸ் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலமே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

‘உத்தியோகபூர்வப் பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை – தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின், யாழ். மாவட்டத்துக்கான 8ஆவது வேலைத்திட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை மாதம் 2 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுப்பூர்வமாக்க உணரும் நிலையில் இருக்கிறோம். இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment