ஏற்கனவே விடுதலையானவர்களின் விபரங்களை வெளியிட்டு அனைவரையும் ஏமாற்றுகின்றது சிறீலங்கா அரசாங்கம்!

ekuruvi-aiya8-X3

jejilநேற்று முன்தினம் சிறீலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சினால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்படுவதாகக் கூறி 23 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டது.

இதில் பலர் ஏற்கனவே விடுதலையாகியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இராசலிங்கம் பார்த்தீபன், டேவிட் சுரஞ்சித், தட்சணாமூர்த்தி செல்வகுமாரன், கோவிந்தசாமி சுந்தரமணி மற்றும் சட்சிணாமூர்த்தி செல்வகுமார் ஆகிய ஐவரும் கடந்த வருடம் நவம்பர் மாதம் விடுவிக்கப்படுவர் என சுமந்திரனால் வெளியிடப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஐவரின் பெற்றோரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேபோன்று பெயர்கள் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள தர்மலிங்கம் சத்தியலிங்கம் கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி விடுதலையாகியுள்ளார். மற்றொருவரான ஜூட் சுரேஸ் என்பவர் ஏற்கனவே புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளதுடன், இதனை அவர்களது குடும்பங்களே உறுதிப்படுத்தியுமுள்ளன.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறி அரசாங்கம் மக்களையும் சர்வதேசத்தையும் தொடர்ச்சியாக ஏமாற்றிவருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

Share This Post

Post Comment