விடுதலைப் புலிகள் சம்பிரதாய படையணியல்ல – இக்பால் அத்தாஸ்!

ekuruvi-aiya8-X3

iqbal.jpg2_.jpg3_விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு சம்பிரதாய இயக்கமல்ல. அதனால் ஒருபோதும் சம்பிரதாய இயக்கமாக மாறமுடியாது என சண்டேலீடர் பத்திரிகையின் புலனாய்வு எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் பலம் பொருந்தியவர்கள் என நீங்கள் எழுதி வந்தீர்கள், ஆனால் உங்கள் கணிப்பு தப்பாய் போய்விட்டதே என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அது ஒரு கருத்து. புலிகள் பலம் பொருந்திய ஒரு அமைப்பு என்பதை நான் பல தடவைகள் தெளிவுபடுத்தினேன். எமது அரச தலைவர்களுக்கு ஏன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

ராஜபக்ஷவுக்கு முந்திய அரசாங்கங்கள் பலத்துடன் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை அழித்திருக்கலாம்தானே. ஏன் அவர்களால் அழிக்கமுடியாமல் போனது. விடுதலைப்புலிகள் பலத்துடன் இருந்ததால் தான் அவர்களுடன் அடிக்கடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

புலிகள் அமைப்பை தவறாகப் புரிந்துகொள்ளவேண்டாம். அவர்கள் சம்பிரதாய படையணி இல்லை. இராணுவம் சம்பிரதாயப் படையணி. விடுதலைப்புலிகளுக்கு சம்பிரதாய படையணியாக மாறமுடியாது.

சம்பிரதாய யுத்தத்துக்கு முகம்கொடுப்பது என்பது இலகுவான விடயமல்ல. உறுப்பினர்களை அதிகரிக்கவேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது. வீடுவீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்த்தார்கள். ஆனால் சரத் பொன்சேகா யுத்தத்தை வென்றார் எனத் தெரிவித்துள்ளார்.

இக்பால் அத்தாஸ் சண்டே லீடர் பத்திரிகையின் புலனாய்வு எழுத்தாளரும் தற்போதுCNN, Times of London, Jane’s Defense Weekly போன்ற ஊடகங்களில் பணியாற்றி வருகின்றார். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் அரசாங்கத்தின் ஊழல்களை எழுதி வந்ததால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என முத்திரை குத்தப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாகியதன் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி தற்போது நாடு திரும்பி அரசியல் கட்டுரைகள் எழுதி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment