வெண்ணையில் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உருவச்சிலை

Facebook Cover V02

jaya_cheese_statue-450x249சென்னையில் புதுமையான முறையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவத்தை வெண்ணையில் முப்பரிமான சிலையாக வடிவமைத்துள்ளார் சமையற்கலை வல்லுனர் வினோத்.

சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் சமையற்கலை பள்ளியின் நிறுவனர் வினோத். காய்கறிகளில் சிற்பம் வடிக்கும் துறையில் வல்லுனரான இவர், கின்னஸ் உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பொறுப்பேற்பதை வரவேற்கும் வகையில், அவரது உருவத்தை முழுவதும் வெண்ணையில் முப்பரிமாண சிலை ஒன்றை வடிவமைத்து வருகிறார்.

பளிங்கு சிலை போல் காட்சியளிக்கும் இந்த சிலை சுமார் 15 கிலோ வெண்ணையை கொண்டு வடிவமைக்கப்படுகிறது. வெப்பம் காரணமாக சிலை உருகாமல் இருக்க மைனஸ் 2 டிகிரி வெப்பநிலை உள்ள அறையில் வைத்து இந்த சிலையை நுட்பமாக வடிவமைத்து வருகிறார். இன்னும் 2 நாட்களில் இப்பணி முழுமையாக முடிந்தவுடன் பொதுமக்களில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக கூறுகிறார் வினோத்.

இதேபோன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த டாக்டர் அப்துல்கலாம், விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களின் சிலைகளை வடிவமைக்க ஆர்வமாக உள்ளதாக கூறும் வினோத், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் இந்தியாவில் இளம் வயதில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment