வெள்ள நிவாரணப் பணிகளில், கொழும்பு துறைமுக நகரத் திட்டம்

Thermo-Care-Heating

colombo-portcityசீனாவின் முதலீட்டில், மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு, வெள்ள நிவாரணத் திட்டம் ஊடாக உதவிப் பொருட்களை விநியோகித்து வருவதாக, கொழும்பு துறைமுக நகரத் திட்டம், தெரிவித்துள்ளது.

போர்ட் சிற்றி சகானா என்று பெயரில், களனி கங்கைக் கரையில் உள்ள சீதவத்தையில் இந்த உதவித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

துறைமுக நகரத் திட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதுடன், மீட்புப் பணிகளில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்தும் பணியாற்றுகின்றனர்.

மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏனைய அமைப்புகளுடன் இணைந்தும், துறைமுக நகரத் திட்ட அதிகாரிகள் பணியாற்றுகின்றனர் என்றும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு, மேல் மாகாண மக்கள் மத்தியில் எதிர்ப்புக் காணப்படுகின்ற நிலையில், அனர்த்த நிவாரணப் பணிகளில், துறைமுக நகரத் திட்டம் தீவிரம் காட்டி வருகிறது.

ideal-image

Share This Post

Post Comment