வெளிநாட்டு போர்க்கப்பல்களைக் குறிவைத்து அமைக்கப்படும் திருகோணமலைத் துறைமுகம்!

Facebook Cover V02

trinco-harbourவெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தங்கும் வகையில் திருகோணமலைத் துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவுள்ளதாக சிறீலங்காக் கடற்படை அறிவித்துள்ளது.

கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற காலிக் கலந்துரையாடல் எனப்படும், கடல் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும்போதே கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் இதுவரை 95 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் சிறீலங்காத் துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ன.

இவற்றில் ஆறு கப்பல்கள் மாத்திரமே கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்ததாகவும், ஏனையவை அனைத்தும் கொழும்புத் துறைமுகத்திலேயே தரித்து நின்றன.

ஆறு கப்பல்கள் மாத்திரமே திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்தமைக்குக் காரணம், அங்கு பொருத்தமான வசதிகள் இல்லாமையே ஆகும்.

அதனால் திருகோணமலைத் துறைமுகத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment