எனது வேலைத்திட்டங்களையே மஹிந்த திறந்து வைத்தார்-சந்திரிகா

ekuruvi-aiya8-X3

chandrikla-sதமது ஆட்சி காலத்தில் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களே கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்தனகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்களை, மைத்திரி – ரணில் அரசாங்கம் திறந்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியிருந்தார். இதுகுறித்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

Share This Post

Post Comment