வேளச்சேரி ஜாஸ் சினிமாஸில் இரண்டு நாட்களாக நடந்த ஐ.டி ரெய்டு நிறைவு

Facebook Cover V02

Aaravசசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை சுமார் 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம் மற்றும் மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.

ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டன. சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இரண்டாவது நாளாக இன்றும் ஜெயா டி.வி அலுவலகம், விவேக் இல்லம், விவேக்குக்கு சொந்தமாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் ஜாஸ் சினிமா என்ற பெயரில் தியேட்டர்கள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது.

12 ஸ்கிரீன்கள் உள்ள இந்த தியேட்டர்களில் ரெய்டு காரணமாக காட்சிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், இங்கு நடைபெற்ற சோதனை நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், நாளை முதல் வழக்கமாக தியேட்டர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment