இந்தோனேசியா போலீஸ் தலமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

ekuruvi-aiya8-X3

Indonesia_policeஇந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில், அந்நாட்டு காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வாகனங்களை ஓட்டி வந்த யாரோ ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார். இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அலுவலக வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.
இதே பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment