வடகிழக்கில் 66 வீதிகள் புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Thermo-Care-Heating

newவடகிழக்கில் 66 வீதிகளை புனரமைப்புச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இதற்கமைய, முதற்கட்டமாக 200 மில்லியன் டொலர் செலவில் 2500 கிலோமீற்றர் வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

யாழ். மாவட்டத்தில், வழுக்கையாறு வீதி, புங்குடுதீவு- குறிகட்டுவான் வீதி, யாழ்ப்பாணம்- மானிப்பாய்- காரைநகர் வீதி, பொன்னாலை- பருத்தித்துறை வீதி, எழுதுமட்டுவாள்- நாகர்கோவில் வீதி மற்றும் நயினாதீவு, குறிகட்டுவான் இறங்குதுறைகள் என்பன புனரமைக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில், முறிகண்டி- கனகபுரம்- பரந்தன் வீதி,

முல்லைத்தீவு மாவட்டத்தில், கொக்கிளாய் கடலேரி பாலம், வட்டுவாகல் பாலம், வற்றாப்பளை பிரதான வீதி,

மன்னார் மாவட்டத்தில், மகிழங்குளம் –பள்ளமடு வீதி, பிரமனாலங்குளம் வீதி, பெரிய பண்டிவிரிச்சான் வீதி, முள்ளிக்குளம் வீதி,

மட்டக்களப்பு மாவட்டத்தில், கிரான் பாலம், சந்திவெளி- திகிலிவெட்டை பாலம், மட்டக்களப்பு- கல்குடா வீதி, என்பன புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும், பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

ideal-image

Share This Post

Post Comment