ஒன்றிணைந்தன கூட்டமைப்பு கட்சிகள்; வீட்டு சின்னத்தில் போட்டியிட முடிவு

tna-3தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஆசன பங்கீடு தொடர்பில் நிலவி வந்த பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் நேற்று ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளோடு கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும், வீட்டுச் சின்னத்திலும் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கிலுள்ள வாக்காளர்களிடம் இலங்கை தமிழரசுக் கட்சியின் கீழ் அதன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






Related News

  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
  • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
  • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *