வீட்டின் மீது விழுந்து நொருங்கியது எம்.ஐ -17 உலங்குவானூர்தி!

Thermo-Care-Heating

heli-crashed-1அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட எம்.ஐ.17 உலங்குவானூர்தியொன்று இன்று காலை வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலி மாவட்டத்தில் உள்ள பத்தேகமவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் எனினும் உலங்குவானூர்தி முற்றாக சேதமடைந்து விட்டதாகவும் சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் கிகான் செனிவிரத்ன தெரிவித்தார்.

உலங்குவானூர்தியிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், இவ்வுலங்கு வானூர்தி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பத்தேகமவுக்கு உணவுப்பொருட்களை ஏற்றிச் சென்றதெனவும், தரையிறங்கும்போது கட்டுப்பாட்டையிழந்து வீட்டில் மோதியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து சிறிலங்கா விமானப்படை எம்ஐ-17 உலங்குவானூர்திகள் – 07, பெல் -212 உலங்குவானூர்திகள் -03, பெல்-412 உலங்குவானூர்தி ஒன்று ஆகியவற்றை மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

heli-crashed-2

ideal-image

Share This Post

Post Comment