ஐ.தே.க. வேட்பாளரிள் கிளைக் காரியாலயம் திருமலையில் உடைப்பு

UNPதிருகோணமலை – கந்தளாய் – பேராறு பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் கிளைக் காரியாலயம் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பேராறு கிழக்கு பத்தாம் வட்டார வேட்பாளருமான என்.எம்.கே.சுபார்கான் என்பவருடைய அலுவலகமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Post

Post Comment