மைத்திரியே அடுத்த வேட்பாளர் – சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுதி!

ekuruvi-aiya8-X3

maithiri6465சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவே அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு சிறந்த வேட்பாளர் என சிறீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் சந்திம வீரக்கொடி, அடுத்த ஆட்சியாளர் தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற வகையில், மைத்திரிபால சிறிசேனவே அடுத்த ஆட்சியாளர் தேர்தலிலும் போட்டியிடத் தகுதியானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவே ஆட்சியாளர் வேட்பாளர் என சிறீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவுசெய்ததில் எந்த வித சந்தேகமும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment