சீனாவில் லாரி வெடித்து சிதறியது; 5 பேர் உயிரிழப்பு

ekuruvi-aiya8-X3

china16669சீனாவில் ஹூனான் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு சென்று கொண்டிருந்த ஒரு லாரி, சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதில் மேலும் 2 லாரிகளும், 2 கார்களும் சிக்கி, அவையும் தீப்பிடித்து எரிந்தன. மேலும் 7 வாகனங்கள் சேதம் அடைந்தன.

இந்த கோர விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்ததாகவும், 20 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான லாரியில் தீப்பிடிக்கும் ரசாயனங்களை எடுத்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment