நியூயோர்க் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது

Facebook Cover V02

manhattan-blastநியூயோர்க் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நியூயோர்க்கின் மென்ஹட்டன் செல்சியா பகுதியில் இடம்பெற்றிருந்த இந்த தாக்குதலில் 29 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவுப் பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இந்த குண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒன்று என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வெடிக்காத மற்றுமொரு குண்டை அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பாக வெடிக்கச் செய்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணத்திற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Share This Post

Post Comment