வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

White-House_15அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவோர்க்கு தடை விதித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அமெரிக்க பாதுகாப்பு துறையையும் இதுவரை இல்லாத அளவுக்கு பலப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று(19) அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் உள்ள கார் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சில நேரங்களில் வெடிக்கும் எனவும் வெள்ளை மாளிகையில் கார் டிரைவராக பணியாற்றும் ஊழியருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அங்கு சோதனை மேற்கொண்ட காவல் துறை அப்படி வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரிவித்தனர்.

இருப்பினும் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் இதேபோல் மர்மநபர் ஒருவர் வெள்ளை மாளிகையின் சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து உள்ளே சென்று காவல் துறையினரும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.






Related News

  • சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 22 பேர் சிக்கினர்
  • தைவானில் ரயில் தடம் புரண்டு விபத்து – 18 பேர் பலி
  • நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் காலமானார்
  • காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
  • அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு
  • ஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்
  • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
  • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *