சுதந்திரதேவி சிலையை டிரம்ப் வெட்டுவது போன்று கார்ட்டூன்

ekuruvi-aiya8-X3

German-magazine-sparks-furor-with-image-of-Trump-beheadingடொனால்டு டிரம்பின் நடவடிக்கையை சித்தரிக்கும் வகையில் சுதந்திரதேவி சிலையை டிரம்ப் வெட்டுவது போன்று ஜெர்மனியின் பிரபல வார இதழ் ஒன்று கார்ட்டூனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே சர்ச்சைக்குரிய அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இது அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளில் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டிரம்பின் நடவடிக்கையை சித்தரிக்கும் வகையில் ஜெர்மனியின் பிரபல வார இதழ் ‘டெர் ஸ்பைஜெல்’ ஒரு பரபரப்பு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்காவின் வெட்டப்பட்ட சுதந்திரதேவி சிலையை ரத்தம் சொட்டும் நிலையில் ஒரு கையில் டிரம்ப் வைத்திருப்பது போலவும், மற்றொரு கையில் ரத்தம் தோய்ந்த கத்தி வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிணைக் கைதிகளை ஐ.எஸ். தீவிரவாதி ‘ஜிகாதி ஜான்’ துண்டிக்கும் படம் இதுபோன்று தான் பிரசுரிக்கப்பட்டிருந்தது. தீவிரவாதி ஜிகாதி ஜானுடன் டிரம்பை ஒப்பிட்டு தற்போது இக்கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.

இப்படத்தை கார்ட்டூன் ஓவியர் ஈடல் ரோட்ரிகுயஷ் வரைந்துள்ளார். ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது என்ற கருத்தை இந்த கார்ட்டூன் சித்தரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கார்ட்டூனை ஜெர்மனியின் சில பத்திரிகைகள் விமர்சனம் செய்துள்ளன. இதில் ஒன்றும் சுவாரசியம் இல்லை என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஜெர்மனி துணை தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒபாமா அதிபராக இருந்த போது அமெரிக்காவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே நல்லுறவு இருந்தது. தற்போது டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற பிறகு இரு நாடுகளிடையே ஆன உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகதிகள் பிரச்சினையில் டொனால்டு டிரம்ப் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை திட்டி வசைபாடியது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment