ஜெர்மனியில் வெட்டுக்கத்தி தாக்குதல்

ekuruvi-aiya8-X3

german555நேற்று (24) ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்டு நகரில் உள்ள ரீட்லின்ஜென் பகுதியில் வாலிபர் ஒருவர் தீடீரென வெட்டுக் கத்தி தாக்குதலில் ஈடுபட்டார்.

இந்த தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் சிரியாவை சேர்ந்த 21 வயதான வாலிபர் என்பதுகாவல்துறைக்கு ஏற்கனவே தெரிந்தவர் என்றும் கூறப்படுகிறது.

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக ஒரு ஆணும், பெண்ணும் பேருந்து நிலையத்திற்கு அருகில் சண்டையிட்டு கொண்டு இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். வெட்டுக் கத்தி தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறை யினர் கைது செய்தனர்.

ஜெர்மனியின் பாவரியா பகுதியில் கடந்த வாரம் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. நேற்று முனிச் பகுதியில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ஜெர்மனியில் வெட்டுக் கத்தி தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment