ஒருவார வேட்டையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 80 பேர் கொல்லப்பட்டனர்

Philippines-war-on-drugsபிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருள் கடத்தல்கார்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், நாடு முழுவதும் சந்தேகத்துக்குரிய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்கு கடந்த திங்கட்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

இந்த சோதனையின்போது ஒரே நாளில் 32 கடத்தல்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தலைநகர் மணிலாவில் நேற்றிரவு நடத்தப்பட்ட அதிரடி ரெய்டுகளில் 13 சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இந்த வாரத்தில் இதுவரை 80 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

மணிலா நகரில் நடைபெற்ற சோதனையில் அப்பாவி மக்களும் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து கைது செய்யப்படுவதாகவும் இங்குள்ள சில அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரிகோ டுட்டர்டே கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் அதிபராக பதவி ஏற்றது முதல் இதுவரையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுமார் 3500 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புடைய 2000 பேரும், விவரிக்க முடியாத சூழ்நிலைகளில் சுமார் 1000 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

 • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
 • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *