வயல்காணிகளை விடுவிக்குமாறு கொக்குத்தொடுவாய் மக்கள் கோரிக்கை!

ekuruvi-aiya8-X3

Protest-445451446கொக்குத் தொடுவாய் மக்கள் தமது வயல்காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1984 ஆம் ஆண்டு தாம் அரசாங்கத்தால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாகவும், பின்னர் 2012ஆம் ஆண்டு மீள் குடியேறியபின்னரும் கூட தமது வயல்காணிகள் விடுவிக்கப்படவில்லை யெனவும் அம்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தாம் தமது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு பெரும் சிரமப்படுவதாகவும், இதற்காக தாம் அரச மற்றும் அரசுசாரா அமைப்புக்களின் உதவியை வேண்டி நிற்பதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமது வயல்காணிகள் தமக்குக் கிடைக்கும் பட்சத்தில் தாம் யாரிடமும் கையேந்தி நிற்கத் தேவையில்லையெனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மகாவலி அபிவிருத்தி வலயம் எனும் பெயரில் அரசாங்கம் தமது காணிகளை கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்த அம்மக்கள் முன்னரும் மகாவலி அபிவிருத்திக்கென காணிகள் கையகப்படுத்தப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் வாதிகள்கூட தமது காணிகளைப் பெற்றுத் தருவதில் அக்கறை காட்டவில்லையென கவலை வெளியிட்டுள்ள அம்மக்கள் தேர்தல் காலத்தில் மாத்திரமே அவர்கள் உறுதி மொழி வழங்குவார்கள் எனவும், வெற்றி பெற்றதும் தமது பிரதேசத்திற்கு அவர்கள் வருவதில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் தமது வயல்காணிகளை விடுவிப்பதற்கு கவனம் செலுத்தி அதனைப் பெற்றுத்தருமாறு உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Post

Post Comment