8000 தமிழ் மக்கள் வாழும் வவுனியா வடக்கில் ஒரே இரவில் 400 சிங்களவர்களுக்கு அனுமதி!

Thermo-Care-Heating

vavuniaவவுனியாவின் சிங்கள கிராமங்களான பொபஸ்வேவா 01, பொபஸ்வேவா 02 ஆகிய சிங்கள கிராமங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைத்துச் செயல்படுமாறு பிரதேச செயலகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தொடர்பில் உள்ளூர் அமைப்புக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேச பொது அமைப்புக்கள் விபரம் தெரிவிக்கையில் ,

வவுனியா மாவட்டத்தின் சிங்கள கிராமங்களான பொபஸ்வேவா 01, பொபஸ்வேவா 02 ஆகிய இரு சிங்கள கிராமங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைத்துச் செயல்படுமாறு தற்போது பிரதேச செயலகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இணைக்கப்பட்ட செயல் வடிவம் தொடர்பில் நாம் அந்தச் சமயமே எதிர்த்து குரல் கொடுத்ததோடு எதிர்காலத்தில் குறித்த கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைத்து விடுவார்கள் என்ற அச்சத்தினையும் வெளியிட்டுருந்தோம்.

இருப்பினும் அப்போது குறித்த விடயம் தொடர்பினில் எவருமே கவனம் செலுத்தவில்லை. இதனால் தற்போது எமது பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வளவு காலமும் இல்லாத சிங்கள மக்கள் ஓர் கடிதம் மூலம் உட்புகுத்தப்பட்டனர்.

இதனை எல்லை மீள் நிர்ணயக் குழுவின் முன்பாக நாம் எடுத்துக் கூறியபோதும் அவர்கள் ஒப்புக்கு எமது தகவலை பதிவு செய்தனரே அன்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வெறும் 8 ஆயிரம் தமிழர்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் ஒரே இரவில் 400 சிங்களவர்கள் உட்புகுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயல்களைத் தடுத்து தமிழ் மக்களின் இருப்பைக் காக்க வேண்டியவர்களோ இன்றி வீதிகளில் தெருச் சண்டியர்கள்போன்று தமது பதவிக்காக போராடுகின்றனரே அன்றி எம்மை திரும்பியும் பார்க்கவில்லை என்பதே தற்போதைய மனவேதனை என்றனர்

ideal-image

Share This Post

Post Comment