வதைமுகாம் குறித்த ஐ.நாவின் கருத்தினை மறுத்து இலங்கை பதில் அறிக்கை

ekuruvi-aiya8-X3

ministryஇலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலையில், காணப்பட்டதாக கூறப்படும் சித்திரவதை முகாம் மற்றும் பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சிறப்பு குழுவினரால் வெளியிடப்பட்ட விமர்சன அறிக்கைக்கு பதில் அறிக்கையினை தயாரிக்கும் பணியில் இலங்கை வெளிவிகார அமைச்சு ஈடுபட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் இரகசிய சித்திரவதை முகாம் குறித்து பரவலான செய்திகள் வெளிவந்த நிலையில், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா சிறப்பு குழுவினர் திருகோணமலைக்கு சென்று இரகசிய முகாம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பினை நடத்திய அந்த சிறப்புக் குழு, இரகசிய வதைமுகாம் இருந்ததை உறுதிப்படுத்தி தகவல்களை வெளியிட்டதுடன், பரணகம ஆணைக்குழுவினையும், விமர்சித்திருந்தது.

இந்நிலையில், ஐ.நா சிறப்புக் குழுவிற்கு பதில் வழங்கும் வகையில், ஐ.நா சிறப்புக்குழுவினால் விமர்சனம் செய்யப்பட்ட பரணகம ஆணைக்குழுவுடன் இணைந்து இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த அறிக்கையினை தயாரித்து வருகின்றது.

இவ்வாறு தயாரிக்கப்படும் அறிக்கையானது, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அடுத்த அமர்வில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share This Post

Post Comment