தருண் விஜய் வருகைக்கு எதிர்ப்பு!

ekuruvi-aiya8-X3

Tarun-vijay_SECVPFசென்னை பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த முன்னாள் பா.ஜ.க. எம்.பி தருண் விஜய்க்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்கு பா.ஜ.க முன்னாள் எம்.பி தருண் விஜய் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

தருண் விஜய் வருகையை அறிந்த பல்கலைக்கழக மாணவர்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தருண் விஜயை உடனே வெளியேறுமாறு மாணவர்கள் கோஷமிட்டனர். மேலும், பல்கலைக்கழகத்தில் மதச்சாயம் பூச நினைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
முன்னதாக, ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த தருண் விஜய் சென்னை பல்கலைக்கழக்திற்கு வரக் கூடாது என்று துண்டடு பிரசுரம் அடித்து மாணவர்களிடையே விநியோகம் செய்தனர்.

பின்னர் காவல்துறையினர் விரைந்து வந்து மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். தொடர் கோஷமிட்டதால் பல்கலைக்கழகு வளாகத்துக்குள்ளேயே 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

5E013DCD-FFBB-4EC4-AD55-36306E746A2D_L_styvpf.gif

Share This Post

Post Comment