வார்த்தைப் போர்- அரசியல் அரங்கில் பரபரப்பு

Facebook Cover V02

Iraniபீகார் கல்வித்துறை மந்திரி சவுத்ரி, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியை டுவிட்டரில் தொடர்பு கொண்டு “டியர் ஸ்மிரிதிஇரானி எப்போது நாம் புதிய கல்விக் கொள்கையை பெற உள்ளோம்? உங்களுடைய காலண்டரில் 2015 எப்போது முடிகிறது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த தகவலில் சவுத்ரி ‘டியர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு ஸ்மிரிதிக்கு சரியாகப் படவில்லை, ‘பெண்களை டியர் என அழைத்து தொடங்குவது சரியல்ல’ என சுட்டிக்காட்டி பதில் டுவிட் செய்து உள்ளார். அவருடைய எதிர்ப்புக்கு சவுத்திரி பதிலளிக்கையில் “இதில் அவமரியாதை ஒன்றும் கிடையாது, பணி ரீதியிலான இமெயில்கள் டியர் என்றுதான் தொடங்கும். எனவே, அப்படி தொடங்கி இருந்தேன்’’ என்றார்.

அதற்கு ஸ்மிரிதி இரானி, ‘‘அசோக் சவுத்ரி, உங்களுக்கும் சரி, வேறு எந்தவொரு நபருக்கும் சரி எனது தகவல்தொடர்புகள் அதார்னியா (மரியாதைக்குரிய) என்றுதான் தொடங்கும்’’ என பதில் அளித்திருந்தார்.

அதன்பின்னரும் சவுத்ரி பதில் டுவிட் செய்ததுடன், தனது கேள்விக்கு ஸ்மிரிதி இன்னும் பதில் அளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

டுவிட்டரில் இவர்களின் வார்த்தைப் போர் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Post

Post Comment