தமிழகத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு 106 கோடி ஒதுக்கீடு!

ekuruvi-aiya8-X3

Eela-akathikalஇன்று (வியாழக்கிழமை) தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் நடை பெற்றுக்கொண்டிருந்தவேளையில் 2016-2017ஆம் ஆண்டுக்கான திருத்திய வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் 106 கோடி ரூபா இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் முகாமில் வசிக்கும் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் பின்னர் வெளிவிடப்படும் முதலாவது நிதிநிலை அறிக்கையாகையால் அனைத்து மக்களிடமும் இது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் நிதி அறிக்கையை வாசித்த அமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் இலங்கைத் தமிழ் அகதிகளுக்காக 106கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு பலராலும் உன்னிப்பாக அவதானித்துக்கொள்ளக்கூடிய அறிக்கையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment