வாரத்திற்கு ஒருமுறையாவது பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்லுமாறு அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

ekuruvi-aiya8-X3

president-450x281சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வாரத்திற்கு ஒருமுறையாவது பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்லுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இன்று நடைபெற்ற கேகாலை மாவட்ட விசேட இணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த இணைப்புக்குழு கூட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பில் அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, அனுர பியதர்ஷன யாப்பா, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share This Post

Post Comment