40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சி!

Facebook Cover V02

varadsiசிறீலங்காவில் 40ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சி நிலவி வருவதுடன், அதை எதிர்கொள்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சிறீலங்காவின் சராசரி மழைவீழ்ச்சியில் 70 வீத மழைவீழ்ச்சியே சிறீலங்காவுக்கு கிடைத்தது. இதனால் நீர்த்தேக்கங்கள் எதுவும் நிறையவில்லை.

தற்போது நீர்த்தேக்கங்களில் உள்ள நீரானது இன்னும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தமுடியும்.

இதனால் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில், 36 வீத பங்களிப்பை வழங்கும் நீர்மின் உற்பத்தி கடுமையான சரிவைச் சந்திக்கவுள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது.

அத்துடன் அரசாங்க பணியிடங்களில் குளிரூட்டிகளை 26பாகை செல்சியசுக்குக் கீழ் குறைக்கவேண்டாமென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன சுற்றறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் என அமைச்சர் அஜித் பி.பெரேரோ தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஓரளவு மின்சாரத்தைச் சேமிக்கமுடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மின்சாரப் பாவனை மற்றும் குடிநீருக்கு அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டுவரவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment