வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இன்றுமுதல் இழப்பீடு!

Facebook Cover V02

1-12016 / 2017 பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்று முதல் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.

மூன்று இலட்சம் விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக 10ஆயிரம் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை இன்று பகல் 12 மணி முதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கு விவசாயிகள் கமநல சேவைகள் மத்திய நிலையங்களின் ஊடாக விண்ணப்பிப்பது அவசியமாகும்.

இதற்கான நிதியை தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியம் வழங்குகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் நான்கு கட்டங்களின் கீழ் எஞ்சிய இழப்பீட்டு தொகைப்பணம் வழங்கப்படவுள்ளது.

Share This Post

Post Comment