அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 100 பேர் பலி: சிரியா குற்றச்சாட்டு

ekuruvi-aiya8-X3

Syrian-Army-says-US-led-airstrike-killed-hundreds-includingசிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகள் பகுதியில் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ரசாயன ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் பரவலாக வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் 27 குழந்தைகள் உள்பட சுமார் 86 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

சிரிய அரசு தலைமையிலான படை தான் இந்த ரசாயன தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் இந்த விவகாரத்தில் ரஷ்யா மற்றும் ஈரான் சிரிய அரசுக்கு ஆதரவு தெரிவித்தன.

Syria3._L_styvpfஇந்நிலையில், அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

டெயிர் இஸ்-ஜோர் என்ற பகுதியில் அமெரிக்க தலைமையிலான சர்வதேச கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அதிகமானோர் பொதுமக்கள் தான் என்று சிரியா குற்றம்சாட்டியுள்ளது.

இருப்பினும் சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment