அதிக நேரம் பறந்த ஆளில்லா வானுார்தி

Thermo-Care-Heating

aeroplaneஸ்பெயினில் உள்ள, வாலென்சியா நகரில் நடந்த ஒரு வெள்ளோட்டத்தில், ‘ஹைப்ரிக்ஸ் 20’ என்ற ட்ரோன் வகையைச் சேர்ந்த, ஆளில்லா வானுார்தி, நான்கு மணி, 40 நிமிடங்கள் தரையிறங்காமல் வானில் பறந்தபடி, உலக சாதனை படைத்துள்ளது.

பெட்ரோல், மின்சாரம் ஆகியவற்றை கொண்டு பறக்கும், இந்த நான்கு விசிறிகள் கொண்ட, ட்ரோனை, ‘குவாடெர்னியம்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆளின்றி பறக்கும் சிறு வானுார்திகள், அதிக நேரம் பறப்பதில்லை என்ற குறை உண்டு.

ஏற்கனவே, ‘ஸ்கை பிரன்ட்’ என்ற ட்ரோன், இரண்டு மணி நேரம், ஒரு நிமிடம் பறந்து, ‘கின்னஸ்’ சாதனையில் இடம் பிடித்துள்ளது.

அனேகமாக, அந்த இடத்தை, அதைவிட இரு மடங்கு நேரம் பறந்த, ‘ஹைப்ரிக்ஸ் 20′ ட்ரோன் பிடித்து விடும்.’ கண்காணிப்பு, வரைபடம் தயாரித்தல், பயிர் பாதுகாப்பு, காவல் துறை மேற்பார்வை போன்ற பணிகளுக்கு, தங்கள் ட்ரோன் மிகவும் பயன்படும்’ என, குவாடெர்னியம் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ideal-image

Share This Post

Post Comment