உதயமாகிறது யோகபுரம் தொழில்நுட்ப கலை கலாசார பெண்கள் மேம்பாட்டு அமையம்

ekuruvi-aiya8-X3

வன்னித்தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில் துணுக்காய் செயலாளர் பிரிவில் யோகபுரம் கிராமம் அமைந்து உள்ளது. இக்கிராமம் வவுனிக்குளம் நீர்ப்பாசனத்திட்டத்தில் அமைந்த குடியேற்ற பிரதேசமாகும். இங்கு வன்னியைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடன் வடமராட்சி, தென்மராட்சி, தீவுப்பகுதி மற்றும் மலையக மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள். பிரதான தொழில் விவசாயமாகவும்  இரண்டாவதாக விலங்கு வேளாண்மையும் உள்ளது.

image   விலங்கு வேளாண்மை என்ற நிலையில் பால் உற்பத்திக்கு மிகச்சிறந்த இடமாக இப்பகுதி திகழ்கின்றது அதனடிப்படையில் அரசினரால் 1985 ஆம் ஆண்டில் பால் உற்பத்தியின் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டது. அதன் ஆரம்பத்தில் மிருக வைத்தியர் காரியாலயம் யோகபுரம் என்னும் இடத்தில் தற்காலிகமாகப்  பால்சேகரிப்புடன் பால் உற்பத்தியின் கூட்டுறவுச்சங்கமும் ஆரம்பமானது அதன் பிற்பாடு 1986 ஆம் ஆண்டில் புதிய நிர்வாகம் தெரியப்பட்டு தலைவர் திரு க.தில்லைநாதன், உபதலைவர் திரு. சி.செல்லத்துரை, செயலாளர் திரு கா.யோகநாதன் உறுப்பினர்கள் திரு தம்பையா திரு த.ரவீந்திரநாதன், திரு சி.சுதேசபவன் திரு மு.பேரம்பலம் மிருகவைத்தியர் ஆகியோருடன் முகாமையாளர்களாக திரு பொ.கேதீஸவ்ரன் மற்றும் திரு கோணேஸ்வரன் ஆகியோர் செயற்பட்டார்கள்.

image(1)இப்புதிய நிர்வாகத்தின் சிறப்பையும் மக்கள் நேசத்தையும் வெளிப்படைத்தன்மையையும் அவதானித்த அக்காலத்தின் மறைந்த அரச அதிபர் அமரர் க.பொன்னம்பலம் அவர்கள் கிட்டத்தட்ட ½ ஏக்கர் காணியைச் சங்கத் தேவைக்காகத் வழங்கினார். அதில் பால் உற்பத்தியில் கிடைத்த இலாபத்திலும், சிரமதானமாகவும் இரண்டு அறைகள் கராஜ், முன்விறாந்தை உள்ள கட்டடம் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டது. அவ்விடத்தில் மக்கள் தேவைகருதி ஒற்றுமையுடன் சிக்கன சேமிப்புச்சங்கங்களின் சமாசம் துணுக்காய், பாண்டியன்குளம் அபிவிருத்திக்கழகம்,

மருத்துவ நிறுவனம் மற்றும் உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம் யோகபுரம் என்பனவும் இணைந்து பணியாற்றி வந்தார்கள்.

இதில் உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம் யோகபுரம் என்னும் அமைப்பு பனை அபிவிருத்தி சபையினால் பதியப்பட்டு துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேசங்களுக்காகச் செயற்பட்டு வந்தது இதன் பின் பனை அபிவிருத்திச் சபையின் இணைப்பாளராக திரு கா.யோகநாதன் அவர்களும் தலைவியாக திருமதி கமலேஸ்வரி அவர்களும் செயற்பட்டு மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களும் செயற்பட்டு வந்தார்கள்.

image(2)ழைக்கும்     மகளிர்களின்     தலைமைத்துவத்தை வளர்த்ததோடு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு முல்லை மாவட்டச் செயலகத்தினரால் உதவிகள் வழங்கப்படட்து. அதனுடாக பன்னவேலை, தும்பு உற்பத்தி, பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், பப்பட உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்கள் முன்னெடுக்கப்பட்டு மிகமிக நெருக்கடியான காலகட்டத்திலும் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

விசேட பயிற்சிகள் வழங்கப்படடு கிராமங்கள் தோறும் பயிற்றப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது இதற்கு சிறிய தொகை ஊக்குவிப்புத்தொகையாக வழங்கப்பட்டது.

 

மேற்கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் நன்கு அவதானித்த அரச அதிபர் அமரர் திரு க.பொன்னம்பலம் அவர்கள் திரு கா.யோகநாதன் இணைப்பாளர் பனை அபிவிருத்திச்சபை அவர்களின் அன்புக்கோரிக்கையை ஏற்று கிட்டத்தட்ட ½ ஏக்கர் காணியை உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனத்திற்கு பால்ச்சபைக்கு அருகில் மாங்குளம் துணுக்காய் பிரதான வீதியில் தந்துதவினார்.

image-0-02-06-d1132fee58fac64ffbb6ecb14788abe21a7f853b63232a1c4869ffe10396f329-Vஇங்கு பெறப்பட்ட காணியில் எமது மகளிர்கள் சுலபமாகக் கருமங்கள் ஆற்றுவதற்கு ஒரு கட்டடம் அவசியம் என உணரப்பட்டது இருந்தும் சீரற்ற சூழ்நிலையில் எதுவும் இலகுவாகச் செய்ய முடியாத நிலை இருந்தது அப்போது எமது மகளிர்களுக்கு யாழ் – செஞ்சிலுவைச்சங்கம், தேசிய     பயிலுனர்     சபை     என்பன     சிறிய உதவித்தொகையுடன் கூடிய பன்னை வேலை, தும்புத் தொழில் பயிற்சித் திட்டங்களை இணைப்பாளர் திரு கா.யோகநாதன்     அவர்களுடன்     இணைந்து உருவாக்கியிருந்தது. இவ் உதவு தொகையில் ஒரு பகுதி மகளிர்களின் பங்களிப்புடன் நலன்விரும்பிகள் மற்றும் சிரமதான அடிப்படைகளில் ஒரு சிறிய கட்டடம் அத்திவாரம் இடப்பட்டது மறைந்த பொதுச்சுகாதார பரிசோதகர் அமரர் திரு சி.சுதேசபவன் அவர்களால் துணுக்காய், பாண்டியன்குளம் மகளிர்கள் ஒன்று சேரந்தது.

1988 ம் ஆண்டு உற்பத்திக்காக ஒரு அறையையும் மற்றைய அறையை மற்றும் பணிகள் செய்வதற்காகவும் தற்காலிகாலிகமாக நிர்மாணிக்கப்பட்டது. இருந்தும் திட்டமிட்டதை அப்படியே செய்யப் போர்ச் சூழல் இடம் கொடுக்கவில்லை
பல நெருக்கடி நிலைகளைத் தாண்டி எமது அமையம் 03.10.2016 ம் திகதி துணுக்காய் பிரதேச செயலாளர் திரு இந்திரராசா பிரதாபன் அவர்களால் உழைக்கும் மகளிர்     அபிவிருத்தி     நிறுவனத்தையும் தொழிநுட்பத்தையும் உள்வாங்கி சமூகம் சார்ந்த விடயங்களுக்காக தொழிநுட்ப கலை கலாச்சார பெண்கள்     மேம்பாட்டு     அமையம்     யோகபுரம் MU/DSTNK/RVSS/26/2016 என பதிவு செய்து திரு கா.யோகநாதன்     அவர்களை     இயக்குனர் முகாமைத்துவமாகக் கொண்டு திரு சு.சுபனேசன்

இயக்குனர் நிர்வாகம், திரு தே.தேலக்ஷன் இயக்குனர் நிதி, சிவஸ்ரீ உருத்திரமூர்த்திக்குருக்கள் இயக்குனர் பொதுசனத்தொடர்பு,     திரு     பொ.கோணேஸ்வரன் இயக்குனர் வெளிக்களம், திருமதி அ.திலகவதி இயக்குனர் மகளிர் மேம்பாடு, செல்வி சி.மகேஸ்வரி இயக்குனர் திட்டமிடல் எனும் நிர்வாகத்திற்குக் கையளிக்கப்படடு; நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. காப்பாளர்களாக துணுக்காய் பிரதேச செயலாளர் திரு இ.பிரதாபன், துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு பொ.இரவிச்சந்திரன, வைத்திய கலாநிதி இ.லம்போதரன், கணினி நிலையப் பொறுப்பாளர் திரு பா.விஜயகுலசிங்கம், ஆகியோர் உள்ளார்கள்.

இதன்     பின்பு     திரு     கா.யோகநாதன்,     திரு பா.விஜயகுலசிங்கம், திரு ச.இராஜேஸ்வரன், கணினி நிலையம் மல்லாவி, திருமதி நிரோஜினி பரராஜசிங்கம், திரு வே.கணேசலிங்கம், திருமதி வசந்தாதேவி, திருமதி தர்மலிங்கம் நந்தினி ஆகியோரின் ஆரம்ப நன்கொடைகள் மூலம் 665,000 ரூபா கொண்டு கேற், விரிவாக்க அறை, அலுவலக அறை, வேலி, மின் இணைப்பு,தண்ணீர் இணைப்பு என்பன உருவாக்கப்பட்டன.

பின்னர் தை மாதம் 2017 இல் எமது இயக்குனர் நிர்வாகம் திரு     சு.சுபனேசன்     அவர்களினால்     பயிற்சி வழங்கப்படடுக்கொண்டிருந்த வன்னித் தமிழ் சமூக கலாசார அமையத்தின் ஆளுமைக்குட்பட்ட கணினி வகுப்புகள் இந் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டு நடாத்தப்பட்டன. அத்துடன் கணிதம், விஞ்ஞானம், நடனம் போன்ற வகுப்புக்களும்     இடம்பெற்று     வருகின்றது     இவ் வகுப்புக்களுகக்காக  திரு த.இராசன்,   திரு லங்கேஸ்வரன், திருமதி சுகந்தி கந்தையா, திரு ஜோசேப் றிமைசர் (மோகன்), திரு வே.அசோககுமார், திரு சிவரூபன், திரு சோதி, திரு ஞானசேகரம் (டென்மார்க்), திரு வே.கணேசலிங்கம், திரு பா.குணசிங்கம், திரு பா.விஜயகுலசிங்கம், திரு பா.நித்தியானந்தம், திரு கா.யோகநாதன் 10 சகோதரர்கள் போன்றோரால் $350 (40,000ரூபா ) ஒவ்வொரு மாதத்திற்கும் ஒருவர் என்ற அடிப்படையில் உதவியைக் கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருகின்றார்கள.;

இலங்கையின் போரினாலும் இயற்கையாலும் பாதிக்கப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், பாண்டியன்குளம் ஆகிய உதவி  அரச அதிபர்கள் உள்ளடங்கிய இப்பிரதேசத்தில் இங்குள்ள மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்குடன் ஆரம்ப கட்டமாக O/L, A/L வகுப்புகளுக்கான புத்தகங்களை திரு சு.ஜெயக்குமார், திரு செ.சண்முகநாதன், திரு க.இராமநாதன், திருமதி த.சோமசுந்தரம்பிள்ளை, அமரர் செல்வராசா நிதி, திரு செல்வாகரன் அவர்களின் நிதி மூலம் பெருமளவு புத்தகங்கள் வாங்கப்பட்டு சுழற்சி முறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

வறுமை காரணமாக மதமாற்றம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும் திடகாத்திரமான சந்ததியினரை வளர்க்கும் நோக்குடனும் ஒற்றுமையும் புரிந்துணர்வு கொண்ட சகிப்புத்தன்மையை வளர்க்கும் நோக்குடனும் துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேச பிரிவிலுள்ள அறநெறிப்
பாடசாலைகள் பலவற்றுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தினை வைத்திய கலாநிதி இ.லம்போதரன் அவர்களைத் தலைவராகக் கொண்ட சைவசித்தாந்த பீட அங்கத்தவர்கள் ஊடாகவும் திரு/திருமதி சாதனா
குடும்பத்தினர் திரு/திருமதி ஜனகன், கனடா ஐயப்பன் தொண்டர்கள் மற்றும் நலன் விரும்பிகள் மூலம் பணம் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது இதனை மிகச் சிறப்பாக ஆரம்பத்தில் திருமதி நித்தியா கார்த்திகேயன் அவர்களும் தற்பொழுது செல்வி சி.பிரதீபா அவர்களும் திருமதி விஜிதா வசந்தராஜன் அவர்களும் நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள.;

புதிய வெளிச்சம் குளுவினரின் இயற்கை வேளாண்மை கருத்தரங்கு திரு.நவஜீவன் தலைமையில் நடைபெற்ற போது பல் வேறு விவசாயிகள் பயனடைந்தார்கள்.

 

எமது மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய இச் சிறிய கடட்டம் போதாது என்பதாலும் மேலும் பல விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதாலும் புதிய கட்டடத்தின் தேவை உணரப்பட்டு அதற்காக படவரைஞர் திருமதி சாந்தி அவர்களிடம் கட்டட வரைபடம் பெறப்பட்டு துணுக்காய் பிரதேசசபையில் அனுமதி பெற்று அதற்கான கட்டட நிர்வாக வேலைகள் கனடா அகில உலக வைத்திய அமைப்பினூடாக எமது மக்களுக்கு கிடைக்க ஆவண செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடத்தினை பின்வரும் தேவைகளுக்காக பயன்படுத்த எண்ணியுள்ளோம்.

1.    நவீன  வசதிகளுடன் கூடிய (Wifi Zone) கற்றல் வள நிலையத்தினை உருவாக்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை மேம்படுத்தல்.
2.    தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தை வளர்க்கும் பயிற்சிகளை வழங்கி அதன் ஊடாக துறை சார்ந்த வேலை வாய்ப்புக்களை வழங்கல்.
3.    இசை வாத்தியக் கருவிகள் மற்றும் சங்கீத நடன வகுப்புக்களை நடாத்தி மாணவர்களை கலைத்துவம் வாயந்;தவர்களாகவும் சமூக ஒருங்கிணைப்புள்ளவர்களாகவும் உருவாக்குதல்
4.    அரும்பொருட்காட்சியகத்தினை உருவாக்குதல்.
5.    பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களின் இடர்பாடுகளை இனம் கண்டு அவர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.

இவற்றை எல்லாம் சிறப்பாகச் செய்வதற்கு முழு நிறைவான கட்டடம் ஒன்று தேவையாக உள்ளது. இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிக பண உதவிகள் எதிர்பார்க்கப் படுகின்றன. உதவும் உள்ளங்கள் எம்முடன் தொடர்;பு கொள்ளுமாறு கூறியும் நிறைவு செய்கிறேன்.

தங்கள் அன்புள்ள

கா.யோகநாதன்
4166093179

yoganathankarthigesu46@gmail.com

தலைவர்
தொழில்நுட்ப கலை கலாசார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையம்இ
யோகபுரம்.

Share This Post

Post Comment