பிப்ரவரி இறுதியில் வங்கிகளில் இயல்பு நிலை திரும்பும்

Thermo-Care-Heating

SBI-chief_SECVPFபிப்ரவரி மாத கடைசிக்குள் வங்கி நடைமுறைகளில் இயல்பு நிலை திரும்பும் என்று ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளின் மதிப்பை நீக்க மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை அடுத்து பணப்புழக்கம் குறைந்தது.

புதிய ரூ.2000, ரூ. 500 நோட்டுகள் போதுமான அளவு அச்சடிக்கப்படாததால் வங்கிகளில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கிகளில் இருந்து மக்கள் பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள்.

போதுமான அளவு பணம் வினியோகிக்கப்பட முடியாததால் ஏ.டி.எம்.களும் 50 நாட்களுக்கு மேலாக முடங்கி கிடக்கின்றன. ஒரு சில ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகின்றன.

இந்நிலையில், பிப்ரவரி மாத கடைசிக்குள் அல்லது மார்ச் மாதம் வங்கி நடைமுறைகளில் இயல்பு நிலை திரும்பும் என்று ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வங்கிகளில் இருப்பு அளவு அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வைப்புத் தொகை எப்படி போகிறது என்பதை மார்ச் மாதம் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இருப்பினும், கட்டுப்பாடுகளை திரும்ப பெறும் வரை எதுவும்

ideal-image

Share This Post

Post Comment