வங்கியில் கூடியிருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்

ekuruvi-aiya8-X3

mk_stalin__largeமதுரையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் குவிந்த மக்கள், தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.

ஏடிஎம்களில் போதிய பணம் இன்னும் நிரப்பப்படவில்லை. இதனால் மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி விட்டு புதிய நோட்டுகளை பெற்றுச் செல்கின்றனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், அந்த தொகுதிக்கு உட்பட்ட நல்லூர் பகுதிக்குச் சென்றார். அங்கு திருவாங்கூர் வங்கியில் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் பணம் மாற்றுவதில் உள்ள சிரமங்களை கேட்டறிந்தார். பின்னர் வங்கி அதிகாரிகளை சந்தித்த ஸ்டாலின், பொதுமக்களின் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யவும், அவர்களை சிரமத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்

Share This Post

Post Comment