தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா – வங்காளதேசம் பிரகடனம்

ekuruvi-aiya8-X3

India-Bangladesh-resolve-to-fight-terror-togetherஇந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இருநாள் அரசுமுறைப் பயணமாக வங்காளதேசம் நாட்டுக்கு சென்றுள்ளார். இருநாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆலோசனை கமிஷன் கூட்டத்தில் பங்கேற்ற சுஷ்மா பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வன்முறை, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவும், வெறுப்புணர்வு, வன்முறை, தீவிரவாத சித்தாந்தங்களுக்கு எதிராக நாட்டு மக்களை பாதுகாக்கவும் இந்தியாவும், வங்காளதேசமும் உறுதி பூண்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் இருநாடுகளும் சந்தித்துவரும் பொது சவால்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த சவால்களில் ஒன்றாக இருக்கும் தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிராக ஒன்றாக சேர்ந்து போராடவும், ஒருமித்த கருத்துள்ள நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றவும் இந்தியாவும் வங்காளதேசமும் தீர்மானித்துள்ளன.

வங்காளதேசத்துக்கு மூன்று கடன் இலக்காக 800 லட்சம் டாலர்களை இந்தியா அளித்துள்ளது. வங்காளதேசத்தின் சமூகப் பொருளாதார மேம்பாடை கருத்தில் கொண்டு மாணவர் விடுதிகள், குழாய் கிணறுகள், கலாசார மையங்கள், ஆதரவற்றோருக்கான இல்லங்கள் உள்ளிட்ட 24 திட்டங்களை இந்தியா இங்கு நிறைவேற்றி தந்துள்ளது.

ராஜ்ஷாஹி, குல்னா, சில்ஹெட் பகுதிகளை நகரமயமாக்குதல் உள்ளிட்ட 54 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 660 மெகாவாட் மின்சாரத்தை அளித்து வருகிறோம். எதிர்காலத்தில் இந்த அளவு இருமடங்காகவும், தேவைக்கேற்ப மூன்று மடங்காகவும் அதிகரிக்கப்படலாம்.

சர்வதேச சூரிய ஒளி மின்சார கூட்டமைப்பில் இந்தியாவுடன் இணைந்துள்ள ஆரம்பகால உறுப்புநாடு என்ற வகையில் வங்காளதேசத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை பொது பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment