வானில் பறக்கும் விசித்திர மனிதர்! (வீடியோ)

ekuruvi-aiya8-X3

iorn-man-Lஅயர்ன் மேன் படத்தில் வரும் கதாநாயகன் உடலில் மாட்டப்பட்ட ஜெட் பேக் மூலம் வானில் பறந்து சென்று மக்களை காப்பாற்றுவார். அது போன்று நிஜ வாழ்க்கையில் ஜெட் பேக்கை உருவாக்கி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டிஷ் கிராவிட்டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வாகனங்களை சோதனை செய்து பார்க்கும் மூத்த பைலட்டுமான ரிச்சர்ட் பவுரிணிங் இந்த சாதனை படைத்துள்ளார்.

அவர் வடிவமைத்துள்ள ஆடையில் ஆறு எரிவாயு கலன்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 22 கிலோ வரையிலான சக்தியை வெளிப்படுத்தி முன்னேறி செல்வதற்கு உதவுகிறது. இது முழுவதும் மனிதனின் கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்படும். ரிமோர்ட் மூலம் கட்டுபடுத்த முடியாது.

ரிச்சர்ட் தனது உடலின் மூலம் இதை கட்டுபடுத்தி வானில் பறக்கிறார். இந்த ஆடை உலகின் மிக வேகமான ஜெட் பேக் என்ற சாதனை பெற்றுள்ளது. இதன் மூலம் மணிக்கு 51.53 கி.மீ. வேகத்தில் பறக்கலாம். அவர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பறந்து சென்றார்.

அவரது ஜெட் பேக்கை சோதனை செய்து பார்த்த கின்னஸ் சாதனை பதிவாளர் பிரவின் படேல் அவருக்கு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.

 

Share This Post

Post Comment