தெலுங்கு தேசம் கட்சியில் இணைகிறார் நடிகை வாணி விஸ்வநாத்!

ekuruvi-aiya8-X3

Vani-Viswanathஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிரணி தலைவியான நடிகை ரோஜாவின் பிரச்சாரத்துக்கு போட்டியாக, தெலுங்கு தேசம் கட்சியில் நடிகை வாணி விஸ்வநாத் இணைய உள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி விஸ்வநாத். தமிழில் மண்ணுக்குள் வைரம், மை இந்தியா, சங்கு புஷ்பங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரை தெலுங்கு தேசம் கட்சியில் சேர்க்க முடிவு செய்தனர்.

ஆந்திராவில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை கடுமையாக தாக்கி அடிக்கடி பேசி வருகிறார்.

அவரை சமாளிக்க நடிகை வாணி விஸ்வநாத்தை தெலுங்கு தேசம் கட்சியில் சேர்த்து நடிகை ரோஜாவுக்கு எதிராக களம் இறக்க விரும்பினர்.

இதற்காக நகரி தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியினர் சென்னைக்கு வந்து நடிகை வாணி விஸ்வநாத்தை சந்தித்து தெலுங்கு தேசம் கட்சியில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

அதற்கு வாணி விஸ்வநாத் சம்மதித்து விட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினர் தெரிவித்தனர். விரைவில் அவர் ஆந்திரா தலைநகர் அமராவதிக்கு சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முன்னிலையில் கட்சியில் சேரலாம் என்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசுவார் என்றும் தெரிவித்தனர்

Share This Post

Post Comment