வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது

ekuruvi-aiya8-X3

kilin-Lகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கிராமத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

தொடர்ந்து இருவரில் ஒருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், மற்றயவர் இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று கிளிநொச்சி நீதிமன்றில் அடையாள அணிவகுப்பிற்கு முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Post

Post Comment