வல்வையில் ஆரோக்கிய மாதா தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது…!

ekuruvi-aiya8-X3

வல்வெட்டித்துறையில் கடலோரமாக ரேவடிக் கடற்கரைக்கு அண்மையில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள அன்னை ஆரோக்கிய மாதா தேவாலயம்  05.02.2017 (ஞாயிற்றுக் கிழமை) பிற்பகல் 5.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அன்னையின் திருச்சொருபத்தை புதிதாகக் கட்டிய கட்டிடத்தில ஸ்தாபித்து மக்களின் வழிபாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சக்கோட்டை,பருத்தித்துறை, பொலிகண்டி, உடுப்பிட்டி வல்வெட்டித்துறை,தொண்டைமானாறு ஆகிய பிரதேசங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் வழிபாட்டினை மேற்கொண்டனர். ஆலயம் திறந்து வைக்கப்பட்டதை;த தொடர்ந்து சகலருக்கும் பாலும், அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள வேளாங்கண்ணி மாதாவின் ஆலயத்தின் வடிவமைப்பில்  அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் திருச்சொருபம் கடலில் மிதந்து வந்து இந்த இடத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 39 வருடங்களாக சிறு கொட்டிலில் வழிபடப்பட்டு வந்த நாளில் இருந்து, வல்வெட்டித்துறை மக்கள் கடற்றொழிலுக்குச் செல்லும் பொழுதும்>   நல்ல  காரியங்களை மேற்கொள்ளும் பொழுதும் ஆரோக்கியமாதாவை வணங்கிய பின்னரே செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    Photo-1 Photo-2 Photo-3 Photo-4 Photo-5 Photo-6

Share This Post

Post Comment