தமிழகத்தை போல ஒரு வாழ்த்து பாடல்: மம்தா திட்டம்

mamathaதமிழகத்தில், தமிழ்தாய் வாழ்த்து பாடல் இருப்பது போல், மேற்கு வங்க மாநிலத்திற்கு என தனியாக ஒரு வாழ்த்து பாடல், இலட்சினை ஆகியவற்றை உருவாக்கும் முயற்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தை கைப்பற்ற பா.ஜ., பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், பா.ஜ., அன்னிய கலாச்சாரத்தை மேற்கு வங்கத்தில் திணிக்க பார்க்கிறது என மம்தா குற்றம் சாட்டி வருகிறார். இத்துடன் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.

தமிழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் உள்ளது போல், ஓடிசா, குஜராத் மாநிலங்களில் அந்த மாநிலங்களின் பெருமை உணர்த்தும் வாழ்த்து பாடல் இருப்பது போல், மேற்கு வங்க மாநிலத்திற்கும் ஒரு வாழ்த்து பாடலை மம்தா பானர்ஜியே எழுதி வருகிறார். இத்துடன் மாநிலத்தின் பெருமையை எடுத்து கூறும் வகையில் ஒரு இலட்சினையை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

Share This Post

Post Comment