வழிபாட்டுத் தலம் மீதான தாக்குதல் சம்பவம் – ஞானசாரவுக்கு மற்றுமொரு சிக்கல்

gnanasaraமாலபே பகுதியிலுள்ள கத்தோலிக்க வழிபாட்டுத் தலம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடேஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் குறித்த 13 பேரையும் விடுவித்து, கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என கூறி, அதனை இரத்துச் செய்து இவர்களை குற்றவாளிகள் என நிரூபித்து தண்டனை வழங்க வேண்டும் என கோரியே சட்ட மா அதிபரால் குறித்த மனு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஆராய்ந்த நீதவான்களான மாலதி குணரத்ன மற்றும் தேவிகா தென்னக்கோன் ஆகியோர், இதனை மார்ச் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.






Related News

  • எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை
  • ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
  • ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *