வலி. மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் இல்லையேல் ஆர்ப்பாட்டம் வெடிக்கும்

ekuruvi-aiya8-X3

Suresவலி.வடக்கு மக்களை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யாவிடின் அந்த மக்கள் மிகப்பெரிய போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வலி.வடக்கு மக்களை ஆறுமாத காலத்திற்குள் மீள்குடியேற்றம் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிடின், அம்மக்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் 200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாத நிலையில், அந்த பகுதிக்கு மக்கள் முழுமையாக செல்லவில்லை. இவ்வாறான சூழ்நிலையில், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படால், மக்களின் பிரச்சினைகள் என்னவாகுமென்பது சந்தேகமே.

எனவே, அரசியலமைப்பு சீர்திருத்தம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையினை நடாத்தி, உள்ளக விசாரணையினை நிறைவு செய்ததன் பின்னர், அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துவதே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Post

Post Comment