விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு பகுதியை இன்று சென்று பார்வையிடலாம்

Thermo-Care-Heating

valiயாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் வைத்து நேற்று (சனிக்கிழமை) விடுவிக்கப்படட வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயக் காணிகளை, மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று விடுவிக்கப்பட்ட காணிகளை இன்று காலை 9 மணிமுதல் பார்வையிட்டு, தமது காணிகள், வீடுகள் குறித்து மக்கள், கிராம சேவகர்களுக்கு உறுதிபடுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை முதல், மக்கள் காங்கேசன்துரை புகையிரதத்தினையும் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், விடுவிக்கப்பட்ட காணியில் பொலிஸார் கையகப்படுத்தியுள்ள இடங்கள் மற்றும் கட்டிடங்களை அவர்களுடன் கதைத்து, ஏதேனும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

ideal-image

Share This Post

Post Comment