பணமதிப்பிழப்பால் நாட்டு மக்கள் எதிர்கொண்ட வலிகளை உணருகிறேன்:பிரதமர் மோடி உரை

ekuruvi-aiya8-X3

modi455”பண மதிப்பிழப்பு செய்த நடவடிக்கை சுத்த யாகம் செய்வதற்கு சமமானது” என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

பண மதிப்பிழப்புக்குப் பின்னர் இவர் நாட்டு மக்களுக்கு முதன் முறையாக உரையாற்றுகிறார். மோடியின் இன்று ஆற்றிய உரையில் இருந்து:தீபாவளிக்குப் பின்னர் பண மதிப்பிழப்பு என்ற முக்கிய முடிவை நாடு எடுத்து இருந்தது. இது நீண்ட நாட்களுக்கு பலன் அளிக்கும்.

இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதை அறிவாளிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்போது நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் கஷ்டங்கள் அனைத்தும் எதிர்காலத்தில், நம் நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்குத்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நேர்மையான இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 50 நாட்களாக மக்கள எதிர்கொண்டு வரும் கஷ்டங்களை, வலிகளை, இடர்களை நான் ஒத்துக் கொள்கிறேன்.

விரைவில் வங்கி நடவடிக்கைகளை எளிதாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. பண மதிப்பிழப்புக்குப் பின்னர் நாட்டு மக்களின் ஆதரவு எனக்கு அபரிதமாக கிடைத்துள்ளது. இந்தியாவைப் போன்று பொருளாதரம் கொண்டுள்ள எந்த நாட்டிலும், இந்தளவிற்கு பண நடமாட்டமோ, வர்த்தகமோ, பொருளாதாரமோ இல்லை. அசவுகரியங்களை விட நேர்மை மற்றும் உண்மை முக்கியம் என்பதை நம் நாட்டு மக்கள் உணர்த்தி விட்டனர்.

நாட்டு மக்களில் சிலர் தைரியத்துடன் இந்த பண மதிப்பிழைப்பை எதிர்கொண்ட விதம் ராம் மனோகர் லோகியா, லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் இருந்து இருந்தால் பெருமைப்படுவார்கள். கிராமப்புறங்களில் உள்ள வங்கி நடவடிக்கைகளை விரைவில் சகஜ நிலைமைக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உங்களுடைய வியர்வை மற்றும் கடின உழைப்பு மூலம் ஒளிமயமான எதிர்கலாத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் 10,000 ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறுபவர்களில் 24 லட்சம் பேர் மட்டுமே வரி செலுத்தி வருகின்றனர்.

நேர்மையற்றவர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மீது சட்டம் பாயும். அப்பாவிகளுக்கும், நேர்மையான நம் நாட்டு மக்களுக்கும் சேவை ஆற்றுகிறோம் என்பதை நமது அரசு ஊழியர்கள் மனதில் கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும்.

கருப்புப் பணத்தின் மூலம், தீவிரவாதம், நக்சலைட்டுகள், போலி நோட்டுக்கள் பெருகுகின்றன என்பதை உலகமே உணர்ந்துள்ளது. தொடந்து ஊழலை ஒழிக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு ஏழைகளுக்கு உதவும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்.”

இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

Share This Post

Post Comment