‘‘ ஜெயலலிதா இறப்பில் சந்தேகம்.. வழக்கு தொடருவேன்’’ சுப்பிரமணியசாமி

ekuruvi-aiya8-X3

subra_samyமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி இந்து நாளிதழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

இதில், ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி அவரின் கருத்தை கேட்டபோது, மர்மம் இருப்பதால் தான் யாரையும் மருத்துவமனையில் அனுதிக்கவில்லை. இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தப்படும் வரை இறப்பு குறித்து பல கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், அப்போலோ மருத்துவமனையில் நடந்த தவறுகளை விசாரித்து, அதற்கான ஆதாரங்களை திரட்டிவருகிறேன் என்றும், அப்போலோ மற்றும் தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு. மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு இனி யார் வாரிசாக முடியும் என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் குடும்பத்தினர்தான் அவரது சொத்துகளுக்கு முழு வாரிசாக முடியும் என அவர் தெரிவித்தார்.

Share This Post

Post Comment