யாழ். பல்கலை மாணவர்கள் 13 பேருக்கு வகுப்புத் தடை!

ekuruvi-aiya8-X3

univ-of-jaffna-450x301யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கலைப்­பீட வர­வேற்பு நிகழ்­வுக்கு முதல்­நாள் இரவு இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்­கள் தொடர்­பில் கலைப்­பீ­டத்­தின் 13 மாண­வர்­களுக்கு வகுப்­புத் தடை விதிக்க நிர்­வா­கம் தீர்­மா­னித்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கடந்த 18ஆம் திகதி இடம்­பெற்ற முத­லாம் வருட மாண­வர் வர­வேற்பு நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­க­ளின்­போது பல்­க­லைக்­க­ழ­கக் கட்­ட­டத்­தின் கண்­ணா­டி­கள் பல அடித்து நொறுக்­கப்­பட்­ட­தா­கக் குற்­றச்­சாட்­டப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்தால் வர­வேற்பு நிகழ்­வுக்­குத் தடை விதிக்­கப்பட்­டி­ருந்­தது. இருப்­பி­னும் குறித்த தடையை மீறி நிகழ்­வு­கள் இடம்­பெற்­றன. இதன் எதி­ரொ­லி­யா­கக் கலைப்­பீ­டம் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டது. இதற்கு மாண­வர் ஒன்­றி­யம் எதிர்ப்­பைத் தெரி­வித்­தி­ருந்­தது.

இருப்­பி­னும் இவை தொடர்­பில் நேற்று ஆராய்ந்த கலைப்­பீ­டம், இத­னு­டன் தொடர்­பு­டைய 13 மாண­வர்­க­ளுக்­குத் தற்­கா­லிக வகுப்­புத் தடை உத்­த­ரவு பிறப்­பிப்­பது என­வும், கலைப்­பீ­டத்­தின் சகல வகுப்­புக்­க­ளை­யும் உட­ன­டி­யாக ஆரம்­பிப்­ப­தெ­ன­வும் முடிவு செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

Share This Post

Post Comment