வாக்குச்சாவடிக்கு சென்ற கேரள மணப்பெண்

anuதமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நேற்று (16)பலத்த பாதுகாப்புடன் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் வாக்கு அளிக்காதவர்களை கேட்டால் ஏன் வாக்கு அளிக்கவில்லை என்று ஆயிரம் காரணம் சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே வாக்கு அளிக்கவேண்டும் என்று விரும்புவர்களுக்கு எதுவுமே தடையில்லை. இதற்கு சிறந்த உதாரணம் கேரளாவை சேர்ந்த அனு என்ற 25 வயது பெண்.

அனுவுக்கு 16 காலை திருமணம். திருமணத்திற்கு தயாராகும் பொருட்டு காலையிலேயே அழகு நிலையத்திற்கு சென்று அலங்காரம் செய்துக்கொண்டுள்ளார். ஆனால் அங்கு கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது. ஆனாலும் இதுவரை வாக்கு அளித்திராத நடைப்பெறும் கேரள சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு அளிக்க ஆர்வமாக இருந்தார்.

திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த போதும், பட்டுப்புடைவை, நகைகளை அணிந்துக்கொண்டு மணக்கோலத்தில் காரில் வாக்குச்சாவடிக்கு வந்த அனு தனது வாக்கை பதிவு செய்தார். ஜனநாயக கடமையை முடித்துவிட்டு அவசர அவசரமாக திருமண மண்டபத்தை நோக்கி ஓடிய அனுவை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.


Related News

 • தமிழகம், கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
 • சபரிமலையில் 200 பேர் மீது வழக்கு – போலீசார் குவிப்பு
 • ராம் லீலாவில் ராவணன் வேடம் அணிந்தவரும் ரெயில் விபத்து பலி
 • விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
 • சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு
 • சபரிமலைக்குள் செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா – போலீஸ் மீது அரசு காட்டம்
 • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் சபரிமலை பயணம் – அய்யப்ப பக்தர்கள் முழக்கம்
 • இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர்- இலங்கை அமைச்சர் சாமிநாதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *