சபாநாயகர் தனபாலை நீக்க கோரும் தீர்மானம் வாக்கெடுப்பு!

ekuruvi-aiya8-X3

dhanapal4545-18-1487399482சபாநாயகர் தனபாலை நீக்க கோரும் தீர்மானம் மீது வரும் 23ம் திகதி சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை மீது கடந்த மாதம் 18ம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

அன்றைய தினம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு வேறொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் தனபால், எண்ணிக்கை அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக குற்றம் சாட்டியது. அது மட்டுமல்லாமல், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் சபாநாயகரை நீக்க கோரும் கடிதத்தை, மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி சபாநாயகர் தனபால் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் கொடுத்தார்.

சட்டப்பேரவை விதி 68ன்படி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதம் கொடுத்த, 14 நாட்களுக்கு பிறகு சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கடிதம் கொடுத்து நாளையுடன் 14 நாள் முடிகிறது. இதற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இதுபற்றி கடந்த 16ம் திகதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், இந்த கூட்டத்தொடரிலேயே இந்த பிரச்னை மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார். அதன்படி வருகிற 23ம் திகதி தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்பு எடுத்துக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலக உயர் அதிகாரி நேற்று தெரிவித்தார்.

அன்றைய தினம் இந்த பிரச்னை விவாதத்துக்கு வரும்போது சபாநாயகர் தனபால், சபையை நடத்த மாட்டார். அவருக்கு பதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, சபையை நடத்துவார். விவாதத்துக்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெறும்.

இந்த வாக்கெடுப்பில் அன்றைய கூட்டத்தில் பங்கேற்கும் எம்எல்ஏக்களில் சரிபாதிக்கு மேல் வாக்குபெறாவிட்டால், சபாநாயகர் பதவியை தனபால் இழக்க நேரிடும். இது முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கும் சிக்கலை ஏற்படுத்தும். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது, தனபாலுக்கு எதிராக வாக்களிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விதியில் கூறியிருப்பது என்ன?

Share This Post

Post Comment